Father scolded son for poor performance, son shoot father to death |
நாகை மாவட்டம், சீர்காழி மேலமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடியபாதம் (வயது 52). இவர் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தற்போது நாகை நரிமனத்தில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். ராணுவத்தில் பணியாற்றிய போது தனக்கு சொந்தமாக துப்பாக்கி வைத்திருப்பதற்காக உரிமம் பெற்றிருந்தார்.அந்த உரிமத்தை செக்யூரிட்டி வேலையில் சேர்ந்தவுடன் புதுப்பித்து வைத்திருந்தார்
அவருடைய மகன் கவுதம் சீர்காழியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கவுதமிடம், உனது சகோதரியை போன்று நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று ஆடியபாதம் அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் இதனை பொருட்படுத்தாத கவுதம் விளையாட்டுதனமாக இருந்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் ஆடியபாதம் தேர்வுக்கு படிக்க கூறி கவுதமை கண்டித்துவிட்டு வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று பணி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய ஆடியபாதம் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் பின்புறத்தில் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது தன்னை தந்தை கண்டித்த ஆத்திரத்தில் இருந்த மகன் கவுதம் வீட்டில் இருந்த தந்தையின் துப்பாக்கியை எடுத்து ஜன்னல் வழியாக வீட்டின் பின்புறத்தில் அமர்ந்து இருந்த ஆடியபாதத்தை சுட்டார். இதில் கழுத்தில் படுகாயம் அடைந்த ஆடியபாதம் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆடியபாதத்தை பார்த்த மனைவி முத்தமிழ் கதறி அழுதார்.
இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயின் கண் எதிரே தந்தையை சுட்டு கொன்ற மகன் கவுதமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மகன் கவுதம் கூறுகையில் தான் ஆத்திரத்தில் அறியாமல்(ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு) செய்துவிட்டதாக சொல்கிறான்..