Showing posts with label விழிப்புணர்வு தகவல். Show all posts
Showing posts with label விழிப்புணர்வு தகவல். Show all posts

Friday, 28 March 2014

அடிக்கடி குளிர்பானம் குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது

குளிர்பானம் குடித்தால் இதயம் பாதிக்கும்!

காபி டீ குடிக்கீறார்களோ இல்லையோ குளிர்பானம் குடிப்பவரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டு வருகிறது. இப்படி அடிக்கடி குளிர்பானம் குடிப்பவர்களின் இதயம் பாதிக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம், குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டது. ஆய்விற்கு  ஆண்கள் மட்டுமே உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 22 ஆண்டுகளாக அமெரிக்கர்கள் 40 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. ஆய்வு  அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது, இனிப்பு கலந்த குளிர்பானத்தை  அடிக்கடி குடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதமும் அதிகரிக்கிறது.

இதற்குக் காரணம் குளிர்பானத்தில் கலக்கப்படும் சில ரசாயன கலவைகள் தான். குளிர்பானங்களில் பயன்படுத்தப்படும் செயற்கை இனிப்பூட்டும்  பொருள்களால் உடல்நலக்குறைவு ஆபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை.

மேலும்  தொடர்ச்சியாக குளிர்பானம் பருகி வந்தால் மட்டுமே உடல் எடை  அதிகரித்து, இதயத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு குளிர்பானம் பருகும் ஒருவருக்கு புராஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.
ஆனால் வாரத்தில் இரண்டு நாள் அல்லது அதற்கு குறைவாக குளிர்பானம் எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு மாரடைப்பு அபாயம் காணப்படவில்லை.
லண்டன் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த ஆய்வு முடிவில், சர்க்கரை அதிகம் கொண்ட காலை நேர உணவு வகைகளை அதிகம்  சாப்பிடுபவர்களுக்கு புரேஸ்டேட் கேன்சர் வரும் வாய்ப்பு 38% அதிகம் என்று ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

அதனால் கூல்டிரிங்க்ஸ்  குடிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி விடுங்கள் ஏனெனில் கூல்டிரிங்க்ஸ் சாப்பிவதன் மூலம் ஆண்களுக்கு பற்களில் கறை மற்றும்  ஆண் ஊறுப்புகளில் பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்ப அதிகம்

Thursday, 11 October 2012

பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.-மெயில் அனுப்பினால் 3 ஆண்டு சிறை

பெண்களை ஆபாசமாக சித்தரித்து எஸ்.எம்.எஸ். மற்றும் மெயில் அனுப்பினால் அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

பெண்களை ஆபாசமாக சித்தரிப்போருக்கு தண்டனை வழங்கும் வகையில் கடந்த 1986ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது.
3 years jail for seding sexy SMS and Email to Girls
தற்போது நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட நிலையில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். இ-மெயில் மூலம் ஆபாச படங்களை அனுப்பும் செயல் அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்கும் வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, 3 October 2012

சென்னை திருவல்லிக்கேணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 மாடி வீடு இடிந்து விழுந்து 2 பேர் பலி: பலர் சிக்கித் தவிப்பு

THIRUVALLICANI_100_year_old_building collaps_tamilnadu


THIRUVALLICANI_100_year_old_building collaps_chennai














A residential building suspected to be over 80-years-old collapsed in Chennai. on Wednesday morning:
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த  2 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

Saturday, 29 September 2012

வீட்டு வாடகை, காய்கறி, பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா

வீட்டு வாடகை, காய்கறி மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா?..| Price raise, Price hike, rent increase caused by IT employees?..


விலை ஏற்றத்திற்கு யார் காரணம்?..

வீட்டு வாடகை, காய்கறி மற்றும் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்திற்கு IT துறையில் வேலை செய்பவர்கள்தான் காரணமா?..
IT employees, house rent increase, price raise, market price rise, gold price raise, petrol price hike, no salary hike, compare employees with workers, IT workers, highest salary, more income, good salary, good package IT job, IT jobs hike price
நேற்று வேலை முடித்து, வீடு திரும்புகையில் பேருந்தில் இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பேச்சின் சாராம்சம், IT துறையினர் வந்த பிறகு சென்னையில் எல்லா விலைகளும் ஏறிவிட்டதேன்றும், வீட்டு வாடகை கிடி கிடு வென உயர்ந்ததர்க்கும் IT துறையினர் காரணம் என்பதை போலவும் பேசிவந்தார்கள்.

Monday, 24 September 2012

தந்தை தேர்வுக்கு படிக்கச் சொல்லி கண்டித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மகன்: ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு

Father scolded son for poor performance, son shoot father to death
சீர்காழி: தந்தை தேர்வுக்கு படிக்கச் சொல்லி கண்டித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மகன்: ஆத்திரகாரனுக்கு புத்தி மட்டு

நாகை மாவட்டம், சீர்காழி மேலமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆடியபாதம் (வயது 52). இவர் ராணுவத்தில் பணியாற்றி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றவர். தற்போது நாகை நரிமனத்தில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். ராணுவத்தில் பணியாற்றிய போது தனக்கு சொந்தமாக துப்பாக்கி வைத்திருப்பதற்காக உரிமம் பெற்றிருந்தார்.அந்த உரிமத்தை செக்யூரிட்டி வேலையில் சேர்ந்தவுடன் புதுப்பித்து வைத்திருந்தார்

Saturday, 22 September 2012

தவறான Facebook Privacy( Public or Private) settingகால் ஏற்பட்ட கலவரம்

Netherlands Birthday Party Invitation went Viral and Turns Violent in Small Dutch Town
கலவர காட்சி காணொளி(Video) இணைப்பு(Links)..

Facebook Privacy( Public or Private) settingகால் ஏற்பட்ட கலவரம்:

நெதர்லாந்த்(Netherland): பிறந்தநாள் விழாவிற்காக Facebook நண்பர்கள் அழைப்பு: கடைசியில் கலவரத்தில் முடிந்த அந்த பிறந்தநாள் விழா.

பதினாறு வயது பெண் ஒருவள் தனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு Facebookல் உள்ள தனது நபர்களுக்கு அழைப்பு விடுத்தால். நண்பர்களுக்கு மட்டும் அழைப்பை பகிர்ந்துகொள்ள Private என்ற Optionஐ   தேர்வு செய்வதற்கு பதில் Public என்ற optionஐ  தேர்வு செய்து பகிர்ந்துகொண்டால், அதன் விளைவாக அந்த அழைப்பு அவளுக்கு அறிமுகம் இல்லாத 30,000 பேருக்கு பரவியது.

Saturday, 15 September 2012

மின் தட்டுப்பாடா?... தமிழகத்திலா?...அப்பு இத கொஞ்சம் பாருங்கப்பு

மின் தட்டுப்பாடா? தமிழகத்திலா?


எனது நண்பர் ஒருவர் காலை 10 மணி அளவில் சென்னையிலுள்ள
மவுண்ட் ரோடு வழியாக சென்றுகொண்டிருந்த போது அவர் கண்ட காட்சி அவரை சந்தோசத்தில் குதிக்க வைத்தது. தெருவிளக்குகள் காலை 10 மணி வரை எரிந்து கொண்டு இருந்தன.



ஆகா!... இரவு முழுக்க எரிந்தாலும் உபரியாக கிடைக்கும் மின்சாரத்தை வைத்து பகலிலும் விளக்குகளை எரிய விடும் மின்வாரியத்தை நினைத்து
வெட்கப்படுவதா?.. வேதனைபடுவதா?..

 - Cartoonist Murugu
 

This is how TNEB wasting the electric power

Monday, 10 September 2012

கல்வி கொள்ளைகளை எதிர்த்து போராடும் பச்சிளம் சிறுமி..(Child fighting against Pre K.G price)

இப்பதாண்ட நாங்க Enter ஆகுறோம் அதுக்குள்ள எப்படி கொள்ளியடிக்கரதுன்னு சொல்லிதரிங்களேடா....  
கல்வி கொள்ளைகளை எதிர்த்து போராடும் பச்சிளம் சிறுமி..(Child fighting against Pre K.G price)

I am not BE, MBBS...
I am just a Pre K.G,,,
Why I pay 30,000, 50,000 to 1,00,000?..






Saturday, 8 September 2012

சொத்துக்கள் வாங்கும் போது கவனிக்க வேண்டிய பிரச்சனைகள் மற்றும் குறிப்புகள்!...

Important Tips to buy a own house in tamilnadu: இன்றைய காலங்களில் சாதாரண மக்களான நாம்  சொத்துக்கள் வாங்கவேண்டும் என்பதே மிகப்பெரிய சவால். அப்படியே நாம் வாங்கினாலும் அதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருப்பது மிக அபூர்வமே. எனவே நாம் எந்த ஒரு சொத்துக்கள் வாங்க முடிவெடுத்தாலும் அதனை பற்றிய முழு விவரங்களையும்

Wednesday, 5 September 2012

நீங்க தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சே ஆகணுமா? : சிவகாசியில் வருடா வருடம் பட்டாசு பாக்டரியில் பட்டாசுகள் வெடித்து பல ஏழை தொழிலாளிகள் பலியாகின்றனர்

5 செப் 2012: சிவகாசியில் பட்டாசு பாக்டரியில் பட்டாசுகள் வெடித்து 40 பேருக்கு மேல் பலி, வேடிக்கை பார்க்க சென்ற 50க்கு மேற்பட்டோர் படுகாயம் :
சங்கி: பலபேர் உயிரை குடித்து தயாரிச்ச பட்டாசை வாங்கி வெடிக்கணுமா?.. 

மங்கி: இந்த பட்டாசு தொழில் எவ்வளவு பேருக்கு சோறு போடுதுன்னு உனக்கு தெரியாதாடா...?

Tuesday, 4 September 2012

ஏழை சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகச்சை தகவல்கள் !!

பெங்களூரிலும் சென்னையிலும் உள்ள மருத்துவமனைகள் ஒரு வயது முதல் பத்து வயது வரை உள்ள ஏழை சிறுவர்களுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சை செய்கிறது. 

Sunday, 2 September 2012

ஏ.டீ.எம் இயந்திரத்திலிருந்து வெளியே வந்த பணம் இனி உள்ளே போக வாய்ப்பில்லை

ஏ.டீ.எம் (ATM) இயந்திரத்திலிருந்து வெளியே வந்த பணம் இனி உள்ளே போக வாய்ப்பில்லை: (ATM iyandhirathilurundhu veliye vandha panam ini ulle poga vaaippillai )

ஏ.டீ.எம்(ATM) இயந்திரத்திலிருந்து வெளியே வந்த பணத்தை குறிப்பிட நேரத்திற்குள் எடுக்காவிட்டால் வெளியே வந்த பணம் திரும்பி உள்ளே செல்லும் முறையை ரிசெர்வ் பேங்க் கடந்த வாரம் முதல் தடை செய்துள்ளது.


தடைக்கு காரணம் என்ன?..


Friday, 31 August 2012

WARNING!.. எரியும் நெருப்பினருகில் Hit Spray போன்ற பொருட்களை உபயோக்கிககூடாது..உபயோகித்ததின் விளைவு உயிர் பலி

எச்சரிக்கை!..

உங்கள் அன்பு குடும்ப உறுப்பினர்களை மிகவும் நேசிப்பவராக இருந்தால் இதை படியுங்கள்... படித்துவிட்டு எரியும் நெருப்பினருகில் Hit Spray போன்ற பொருட்களை உபயோக்கிககூடாது என்று உறவினர்களுக்கு வலியுறுத்துங்கள். ஏனெனில் அவை எளிதில் தீப்பற்றி எரியக்கூடியவை, அது மட்டுமில்லாமல் அவை வெடிக்கும் தன்மையும் கொண்டது..



இதோ ஒரு உண்மை சம்பவம்...

மகராஷ்டிரா மாநிலம் பூனாவில் ஒரு பெண் எரியும் அடுப்பினருகில் "Hit" spray உபயோகபடுத்தியதால்  வெடித்து  தீ பற்றி இறந்தார், அவரை காப்பாற்ற சென்ற கணவரும் தீயில் கருகி காயமுற்றார்...

Thursday, 30 August 2012

உணவு சாப்பிட்ட பிறகு டீயோ, காபியோ சாப்பிடலாமா?

உணவு சாப்பிட்ட பிறகு டீயோ, காபியோ சாப்பிடலாமா?

இந்தக் கேள்விக்கு டயட்டீசியன் தாரிணி கிருஷ்ணன் சொன்ன பதில் பலரையும் யோசிக்கவைக்கும்.

''பாலைக் காய்ச்சும்போது அதில் உள்ள வைட்டமின்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. பாக்கெட் பாலில் தண்ணீர் கலந்து காய்ச்சும்போது, கொழுப்பின் அளவும் குறையும். பாலுடன் டீத்தூள் சேரும்போது ஆக்ஸலேட் மற்றும் ஃபைடேட் (Oxalate  & Phytate)என்ற ரசாயனங்கள் உருவாகின்றன. உணவுடன் சேர்த்து டீ குடிக்கும்போது உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகித்துக்கொள்ளும் தன்மையை இந்த ரசாயனம் தடுக்கிறது".

எனவேதான், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது உணவு வேளைகளுக்கு இடையிலோதான் நாம் டீ சாப்பிடுகிறோம்.

Wednesday, 29 August 2012

Adulteration in Milk - பாலில் கலப்படங்கள் மற்றும் அவைகளை கண்டறியும் முறை

வெளுத்ததெல்லாம் பால் அல்ல!



கள்ளம் கபடம் அறியாத மனிதர்கள் யாரையும் சுலபமாக நம்பி ஏமாந்து விடுவார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது. இப்போது பால் விஷயம் இதற்கு ஒருபடி மேலே போய்விட்டது. நம்பிக்கை தளர்ந்துபோய்விட்டது. நாம் அருந்தும் பால் வெள்ளையாக இருந்தாலும்கூட நிஜமான பால் எவ்வளவு? கலப்படம் எவ்வளவு? என்ற கேள்வி பிறந்துவிட்டது. அப்போதைக்கு அப்போது கறந்து சைக்கிள் அல்லது டூ வீலரில் கொண்டுவந்து விநியோகிக்கப்படும் பாலையும்கூட நம்ப முடியவில்லை. சில விதமான பாக்கெட் பாலையும் நம்ப முடியவில்லை.  முன்பெல்லாம் லேக்டோ மீட்டர் போட்டுப் பாலில் எவ்வளவு தண்ணீர் என்று சோதிப்பார்கள். தண்ணீர்ப்பாலில் யூரியா, ஸ்டார்ச், மைதா மாவு, குளுக்கோஸ் கலந்து சோதித்தால் தண்ணீர் கலந்ததைக் கண்டுபிடிக்க முடியாது. சாதாரணமாக சைக்கிள் - டூவீலரில் கறந்த பால் என்று விற்பவர்கள் மேற்கொள்ளும் கலப்படம் இது. 

Tuesday, 28 August 2012

வாழைப்பழ தோலினால் கரை பிடித்த பற்களை வெண்மையாக்க முடியுமாம்

வாழைப்பழ தோலின் மூலம் கரை பிடித்த பற்களை வெண்மையாக்க முடியுமாம்:

உரித்த வாழைப்பழ தோலின் உள்பகுதியை உங்கள் பற்களில் நன்கு படுமாறு வட்ட வடிவில் 2 நிமிடங்கள் தொடர்ந்து  தேய்க்கவும் பிறகு சிறிது நேரம் கழித்து வழக்கமான முறையில் Brush கொண்டு பல்துலக்கவும் ...இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் செய்துவந்தால் பற்க்கள் வெண்மையாகுமாம்.
                           
பற்களில் கரை இருந்தால் இன்னும் சிறுது நேரம் கூடுதலாக தேய்க்கவேண்டுமாம்..

Monday, 27 August 2012

கிறிஸ்துவர்களுக்கு ஓய்வூதியம் தருவதாக ரூ.500 கோடி மோசடி செய்த நிறுவனம் மீது கிறிஸ்துவ அமைப்புகள் புகார்

சென்னை: நாடு முழுவதும் உள்ள பல கிறிஸ்துவ போதகர்களிடம் பல மடங்கு பணம் திரும்ப தருவதாக கூறி, சுமார் ரூ.500 கோடி அளவிற்கு பணம் வசூலித்து மோசடி செய்த ஜான் பிரபாகரன் என்பவர் நடத்தி வந்த நிறுவனம்(இவர், "ஹெச்.ஐ.எம்' என்ற பெயரில், தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். தமிழக அளவில் சுற்றுப்பயணம் செய்த பிரபாகரன், கிறிஸ்துவ மக்களுக்கு ஓய்வூதியத் திட்டம் தருவதாக, பிரசாரம் செய்தார்.) மீது நடவடிக்கை எடுக்க கோரி கிறிஸ்துவ அமைப்புகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர் சாம் ஏசுதாஸ் மற்றும் தமிழக போதகர்கள் ஐக்கியம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது.

அமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் சுயநலம் கொண்டவர் எனும் உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான செய்தி.  நம்மில் பலரும் அமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் எல்லாம் மற்ற தேசங்களில் உள்ள மக்களைப் பற்றி கவலை கொள்வதில்லை என்ற பரவலான கருத்து உள்ளது.  அவர்கள் அனைவரையும் “அமெரிக்க முதலாளித்துவம்” எனும் இரு சொல்லில் அடக்கி ஏசுவோரும் உண்டு.
ஆனால் உண்மையில் பிற தேச மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மேலை நாட்டு மக்களும் உண்டு.  இவர்கள் $200 , $500 என மிகச் சிறிய அளவிலான பணத்தை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களுக்கு சிறு கடன் தொகையாக வழங்குவர்.  அவர்கள் அந்தப் பணத்தை பயன்படுத்தி தமது சிறு தொழில்களை (புதிய மாடு வாங்குவது, ஆடுகளை வாங்கி வளர்த்து விற்பபது, பெட்டிக் கடை வைப்பது, தையல் எந்திரம் வாங்குவது.. ) ஆரம்பிக்க மற்றும் மேம்படுத்த பெறுவர். பெற்ற பணத்தை சிறிது சிறிதாக திரும்ப கொடுப்பர்.

கடை இடியாப்பம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல்

கடை இடியாப்பம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல்:


இடியாப்பம் ஒரு நல்ல உணவு என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியாப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள்.

ஆனால் இடியாப்பத்தை விற்பனை செய்யும் . பெரும்பாலான கடைக்காரர்கள் இடியாப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால், இனிமேல் இடியாப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் !

Related Posts Plugin for WordPress, Blogger...