Saturday, 22 September 2012

தவறான Facebook Privacy( Public or Private) settingகால் ஏற்பட்ட கலவரம்

Netherlands Birthday Party Invitation went Viral and Turns Violent in Small Dutch Town
கலவர காட்சி காணொளி(Video) இணைப்பு(Links)..

Facebook Privacy( Public or Private) settingகால் ஏற்பட்ட கலவரம்:

நெதர்லாந்த்(Netherland): பிறந்தநாள் விழாவிற்காக Facebook நண்பர்கள் அழைப்பு: கடைசியில் கலவரத்தில் முடிந்த அந்த பிறந்தநாள் விழா.

பதினாறு வயது பெண் ஒருவள் தனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு Facebookல் உள்ள தனது நபர்களுக்கு அழைப்பு விடுத்தால். நண்பர்களுக்கு மட்டும் அழைப்பை பகிர்ந்துகொள்ள Private என்ற Optionஐ   தேர்வு செய்வதற்கு பதில் Public என்ற optionஐ  தேர்வு செய்து பகிர்ந்துகொண்டால், அதன் விளைவாக அந்த அழைப்பு அவளுக்கு அறிமுகம் இல்லாத 30,000 பேருக்கு பரவியது.



அதனால் எதிர்பாராத விதமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விழாவிற்கு வந்தனர், வந்தவர்கள் அனைவரும் Project-X என்ற ஹாலிவுட் படத்தினுடைய பெயர் அச்சடிக்கப்பட்ட T-Shirt அணிதிருந்தார்கள். 'Project-X' படம் மூன்று இளைஞர்கள் நடத்தும் பிறந்தநாள் விழாவில் ஏற்படும் கலவரத்தை பற்றிய படம்...

கடைசியில், அந்த அறிமுகம் இல்லாதவர்கள் கலந்து கொண்ட பிறந்தநாள் விழா கலவரத்தில் சென்று முடிந்தது. 600க்கும் மேற்பட்ட காவலர்கள் கலவரம் நடந்த இடத்திற்கு விரைந்தனர் ஆனால் அவர்கள் நிலையை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் கலவரக்காரர்களால் ஒரு கார் எரிக்கபட்டது, அங்கிருந்த கடைகள் சூறையாடப்பட்டன, தெரு விளக்குகள் உடைக்கப்பட்டன, ஆறு பேர் காயமுற்றனர், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து நெதர்லாந்து போலீஸ் 34 பேரை கைது செய்துள்ளதாம்...

Friends, Please, Facebook போன்ற வலை தளங்களை உபயோகிக்கும் முன் அதிலுள்ள  Security Optionகலை நன்கு தெரிந்துகொள்ளுங்கள்...

கலவர காட்சி காணொளி(Video) இணைப்பு(Links)..


-->
Related Posts Plugin for WordPress, Blogger...