Sunday, 23 September 2012

தானாகவே அணைந்துவிடும் பற்றவைத்த சிகரெட்(self-extinguishing Fire-safe cigarettes):

Fire safe Cigarettes | self-extinguish cigarettes | Cigarette smoking safety | அணையும் சிகரெட் | சிகரெட்டால் உயிர் பலி

தானாகவே அணைந்துவிடும் பற்றவைத்த சிகரெட்(self-extinguishing cigarettes):


Burn test result between normal cigarette and Fire-safe cigarette 


Fire safe Cigarettes, self-extinguish cigarettes, Cigarette smoking safetyFire safe Cigarettes, self-extinguish cigarettes, Cigarette smoking safety

Fire safe Cigarettes, self-extinguish cigarettes, Cigarette smoking safety                




 சிகரெட்(cigarette) பிடிப்பவர்கள் அதனால் வரும் புகையால்(smoke) தன்னை அழித்துகொல்வதுடன் தனது சுற்றத்தாரையும், உறவினர்களையும் தனது குழந்தை குட்டிகளையும் அழிக்கின்றனர்.

சிகரெட் புகையால்(cigarette smoke) வரும் அழிவுகள் ஒருபுறமிருக்க, புகையும் சிகரெட்டில் இருக்கும் நெருப்பினால் விளையும் தீ விபத்து சம்பவங்கள் ஏராளம். அதனால் ஏற்ப்படும் பொருள் நாசம், உயர் பலி எண்ணிலடங்கா. இதற்க்கு தீர்வு கட்டவேண்டுமென்ற நோக்குடன் ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தானாகவே அணைந்துவிடும் சிகரெட்டை(Fire-safe cigarette) அமுலுக்கு கொண்டுவரவேண்டுமென்று சட்டங்கள் போட்டு நடைமுறை படுத்துகின்றன.

அது சரி இந்த சிகரெட்டில் அப்படி என்ன விசேசம்(special) இருக்கிறது?.. சாதாரண சிகரெட்டின்(normal cigarette) மேல் சுற்றப்பட்டிருக்கும் பேப்பர்(paper cover) அதிக காற்று புகக்கூடிய தன்மையுடையது. அதனால் பற்றவைத்த சிகரெட்டை தூக்கி எறிந்தால்  அது முழுவதும் புகைந்து தீரும் வரை நெருப்பின் அனல் அதில் அணையாமல் இருக்கும், இதுவே நிறைய தீ விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது.  ஆனால் இந்த புதிய முறை சிகரெட்டின் இரண்டு இடங்களில் நெருப்பு எரிவதற்கான காற்று புகமுடியாத பேப்பர் சுற்றப்படிருக்கும்(Speed bumps) அகவே பற்றவைத்த சிகரெட்டை உபயோகபடுட்டத்தாமல் இருந்தாலோ அல்லது சிகரெட்டை தூக்கி எறிந்தாலோ சிகரெட்டில் புகையும் நெருப்பு காற்று புகமுடியாத பேப்பர்(Speed bumps) சுற்றபட்டுள்ள இடத்தை நெருங்கியதும் அதற்க்கு எரிய போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் தானாகவே அணைந்து விடும்.

இது அமெரிக்க, ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பா நாடுகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.
நமது நாட்டிலும் இந்த வகை சிகரெட்டை(cigarette) அமுலுக்கு கொண்டுவந்தால் எதிர்பாராத விதமாக சிகரெட் தீயால் ஏற்ப்படும்  நிறைய தீ விபத்துக்களை(accidents) தடுக்கலாம் என்பது மறுக்கமுடியாத உண்மை...

இதில் ரசனையுடன் சிகரெட் புகைப்பவர்களுக்கு(cigarette smokers) ஒரு ஆதரவான விசயமும் உள்ளது.

சிலர் பற்றவைத்த சிகரெட்டை எதாவது அலுவல் காரணமாக அப்படியே Ash trayவில் வைத்துவிட்டு சென்று சற்று நேரத்தில்  திரும்பி வருவதற்குள் சிகரெட் முழுவதுமாக புகைந்து கரியாகி போயிருக்கும்.

ஆனால் இந்த வகை சிகரெட்டை உபயோகிக்கும் பொது சிகரெட் முழுவதும் கரியாகாமல் நெருப்பு அணைந்து போயிருக்கும் எனவே அதே சிகரெட்டை திரும்பவும் பற்றவைத்து அவர்கள் ரசனையுடன் புகைக்கலாம். இதனால் சிகரெட் சேதமில்லை, சிகரெட் வாங்கும்(buy) செலவும்(expense) மிச்சம்.  

உங்கள் கருத்து?...


Related Posts Plugin for WordPress, Blogger...