Showing posts with label சுவாரசிய செய்திகள். Show all posts
Showing posts with label சுவாரசிய செய்திகள். Show all posts

Friday, 28 March 2014

தூங்கிய பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்து அதனை விழுங்கிய வாலிபர்...

சென்னை புனித தோமையார்மலை நசரத்புரத்தை சேர்ந்த தனலட்சுமி, தனது உடல்நலம் பாதிக்கப் பட்ட தந்தையை பராமரிப்பதற்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் தங்கி இருந்தார். 
 
வார்டுக்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த தனலட்சுமியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர் ஒருவர் அறுத்துக்கொண்டு ஓடினார். இதனால் அதிர்ச்சியடைந்த தனலட்சுமி ‘‘திருடன் திருடன்'', என்று கூச்சலிட்டார். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு மர்ம ஆசாமியை பொதுமக்கள் விரட்டிப் பிடித்துள்ளனர். ஆனால், அதற்குள் தான் துரத்தப் படுவதை உணர்ந்த திருடன் சினிமா பட ஸ்டைலில் திருடிய செயினை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். செயின் பறிப்பு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அரசு மருத்துவமனை போலீசார் திருடனைக் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருட்டில் ஈடுபட்ட நபர் சென்னை திருவல்லிக்கேணி பல்லவன்சாலை பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன்(28) என்பது தெரியவந்தது. திருடிச் சென்ற செயின் குறித்து முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்த கமலக்கண்ணனை மருத்துவர்கள் சோதனை செய்தனர். அப்போது எக்ஸ்ரேயில் கமலக்கண்ணனின் வயிற்றில் தங்கச் சங்கிலி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து கமலக்கண்ணன் வயிற்றில் உள்ள தங்க சங்கிலியை வெளியே கொண்டு வருவதற்கான சிகிச்சை அளிக்கவும், முடியாதபட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று பிற்பகலில் கமலக்கண்ணனுக்கு ‘எண்டோஸ்கோபி' சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன் மூலம் வயிற்றில் இருந்த 20 செ.மீ. நீளமுள்ள தங்கசங்கிலி வெளியே எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘தற்போது குற்றவாளி மயக்கநிலையில் உள்ளான். மயக்கம் தெளிந்தவுடன், மருத்துவமனை காவல்நிலையத்துக்கு கொண்டுபோய் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட இருக்கிறது. கமலக்கண்ணன் மீது ஏற்கனவே பல கொள்ளை, திருட்டு சம்பவங்கள் இருக்கின்றன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதாகி இருந்த கமலக்கண்ணன் சமீபத்தில் தான் விடுதலையாகி இருந்தான். வெளியே வந்தவுடன் மீண்டும் கைவரிசை காட்ட முயன்றபோது, கையும், களவுமாக மாட்டிக்கொண்டான்'' எனத் தெரிவித்தனர்.

Thursday, 11 October 2012

ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்து: இந்திய பணக்காரர் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம்

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி முதலிடத் தில் உள்ளார்.

Mukesh Ambani No.1 richest business man Indiaபுதுடெல்லி, அக் 11-

இந்திய பணக்காரர்கள் பட்டியலில், ரூ.96 ஆயிரத்து 500 கோடி சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி முதலிடத் தில் உள்ளார். சீனாவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ஹுருன், இந்திய பணக்காரர்கள் பற்றிய ஆய்வை மேற்கொண்டது. பங்குகள், சொத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பணக்காரர்கள் பட்டியலை அந்நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Saturday, 22 September 2012

தவறான Facebook Privacy( Public or Private) settingகால் ஏற்பட்ட கலவரம்

Netherlands Birthday Party Invitation went Viral and Turns Violent in Small Dutch Town
கலவர காட்சி காணொளி(Video) இணைப்பு(Links)..

Facebook Privacy( Public or Private) settingகால் ஏற்பட்ட கலவரம்:

நெதர்லாந்த்(Netherland): பிறந்தநாள் விழாவிற்காக Facebook நண்பர்கள் அழைப்பு: கடைசியில் கலவரத்தில் முடிந்த அந்த பிறந்தநாள் விழா.

பதினாறு வயது பெண் ஒருவள் தனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வருமாறு Facebookல் உள்ள தனது நபர்களுக்கு அழைப்பு விடுத்தால். நண்பர்களுக்கு மட்டும் அழைப்பை பகிர்ந்துகொள்ள Private என்ற Optionஐ   தேர்வு செய்வதற்கு பதில் Public என்ற optionஐ  தேர்வு செய்து பகிர்ந்துகொண்டால், அதன் விளைவாக அந்த அழைப்பு அவளுக்கு அறிமுகம் இல்லாத 30,000 பேருக்கு பரவியது.

Saturday, 15 September 2012

இறந்துபோன எஜமானனின் கல்லறைக்கருகில் 6 வருடமாக வாழும் அதிசய நாய்



A loyal Dog Capitan refuses to leave from his dead master's grave for six years


அர்ஜெண்டினாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விலா கார்லொஸ் பாஸ் என்றநகரில் வசித்து வந்தவர் மிகுவல் கஸ்மென் என்பவர் கெபிடன் என்ற பெயருடைய நாயினை அவருடைய மகனிற்கு பரிசளிப்பதற்காக 2005இலிருந்து செல்லப்பிராணியாக வளர்த்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக கஸ்மன் கடந்த 2006ம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.

அவர் இறந்த பிறகு அவர் வளர்த்த அந்த செல்லபிராணியான கெபிடனை காணவில்லை..அது எங்காவது வண்டியில் மோதி இறந்திருக்கலாம் என்று அவருடைய உறவினர்கள் எண்ணினர். ஆனால், ஒரு வாரம் கழித்து ஒரு ஆச்சர்யம் அவர்களுக்கு காத்திருந்தது,  ஈமச்சடங்கிர்காக அவருடைய கல்லறைக்கு சென்ற பொது அங்கே அந்த கெபிடன் இருப்பதை கண்டு உறவினர்கள் ஆச்சர்யமுற்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், அவருடைய உறவினர்களை கண்டவுடன் கெபிடன் ஒரு விதமான அழுகுரலுடன் அவர்களிடம் வந்து தனது துக்கத்தை பரிமாரிகொண்டதாம். மேலும், அவர் இறப்பதற்கு முன்
வரை அந்த கெபிடன் இந்த மயானம் இருக்கும் இடத்திற்கு வந்ததில்லையாம். எப்படி அதற்க்கு இந்த இடம் தெரியும் என்ற ஆச்சர்யமும்,  இந்த வாயில்லா ஜீவனுக்குள்ள அதீத பற்றினை கண்டு ஆனந்த கண்ணீரும் வடிக்கின்றனர் அங்குள்ள மக்கள்.

இதில் என்ன ஒரு விசேடமேன்றால் அந்த வாயில்லா ஜீவன் மறைந்த தனது எஜமானின் கல்லறைக்கு அருகில் கடந்த 6 வருடங்களாக வாழ்ந்து வருகிறது...

இந்த நாய்க்கு உணவளிப்பது அந்த மயானத்தின் பராமரிப்பாளர் ஆவார்.

அறிவியல்பூரவமாக நாய்களுக்கு மனிதர்களை விட நூறு மடங்கு அதிக மோப்ப சக்தியுள்ளது அதன் காரணமாகவே அதனால் தன் முதாலாளி இருக்கும் இடத்தை கண்டுகொள்ள முடிந்தது. 6 வருடங்களாக வாழ்ந்து வருவது அதனுடைய அதீத பாசத்தை காட்டுகிறது..

பவர் ஸ்டார் சீனிவாசன் கைது: 60 லட்ச ரூபாய் ஏமாற்றிய மற்றும் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வழக்கு



தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

திரையுலகில் லத்திகா என்ற படத்தை தயாரித்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் டொக்டர் சீனிவாசன்.
இவரை கொலிவுட்டில் பவர் சீனிவாசன் என்றே அடைமொழியோடு அழைத்து வந்தனர்.


தற்போது இயக்குனர் ஷங்கரின் ஐ மற்றும் சந்தானத்துடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகின்றார்.
இதற்கிடையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் பவர் ஸ்டாரிம் ரூ.10 கோடியை கடனாக கேட்டுள்ளார்.
சொத்துகளின் பத்திரங்களை சரிபார்க்க சீனிவாசன் ரூ.65 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் கடன் தாராமல் கடந்த 5 மாதங்களாக சீனிவாசன் ஏமாற்றி வந்தார்.

இதனால் பாலசுப்பிரமணியம் எனக்கு பணம் வேண்டாம். நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத் தால் போதும் என்றார்.
ஆனால் சீனிவாசன் ரூ.5 லட்சத்தை கொடுத்து விட்டு மீதம் ரூ.60 லட்சத்தை தரமுடியாது என கூறிவிட்டார். மேலும் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்து பாலசுப்பிரமணியன், சென்னை பொலிஸ் கொமிஷனர் திரிபாதியிடம் கடந்த மாதம் 24ம் திகதி புகார் கொடுத்தார்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் துணை கொமிஷனர் பவானீஸ்வரி மேற்பார்வையில் உதவி கொமிஷனர் ராஜாராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் கொண்ட தனிப்படையினர் நேற்று மாலை சீனிவாசனை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில், நடிகர் சீனிவாசன் ரூ.10 கோடி கடன் தருவதாக கூறி ரூ.60 லட்சம் ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார்.

இதைதொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சீனிவாசனை நீதிபதியின் உத்தரவின் படி பொலிஸார் புழல் சிறையில் அடைத்தனர்.


Actor 'Power Star' Srinivasan was arrested on Friday for fraud on Rs 65 lakh of cheating a businessman.  Businessman  G U Balasubramanian, proprietor of RBS International in Chrompet lodged a complaint on  Power Star Srinivasan saying that he has taken a loan of Rs 10 Crore loan from him and has never paid back. Police said that the businessman had approached Srinivasan's finance company, Baba Trading on PH Road to arrange the cash but in return the actor said that he would charge 5 % as service charge for getting the loan.

"Power Star failed to obtain the loan and kept dodging the businessman. He promised to return the sum when the complainant warned him of approaching us," said an investigating officer. It also seems that Bala Surbamanian was threatened at gun point when he approached the actor for his money at his Anna Nagar residence.

Police have registered a case under IPC Section 406 (punishment for criminal breach of trust), 420 (cheating) and 506 (ii) (criminal intimidation) 27 Arms Act. He was remanded in judicial custody and lodged in Puzhal prison. Police said several others had earlier gone to them with complaints against Srinivasan, but they all arrived at a compromise. On May 4, a Saidapet resident called Ganesan lodged a complaint that Srinivasan had taken 10 lakh promising a loan.

Tags: Power Star Arrest | Power Star Arrested | Power Star Srinivasan Arrest | Power Star Srinivasan Arrested | Power Star Srinivasan Fraud | Power Star Srinivasan Reason

Monday, 10 September 2012

டாஸ்மாக்: ஒரு ஃபுல் பாட்ல ராவா அடிச்ச மாதிரி சரக்கு விலை கிர்ர் சர்ர்ன்னு ஏறிபோச்சி

டாஸ்மாக்(TASMAC): ஒரு ஃபுல் பாட்ல ராவா அடிச்ச மாதிரி சரக்கு விலை கிர்ர்.. சர்ர்ன்னு ஏறிபோச்சி: ஆனாலும் நம்ம குடிமக்கள் விட்றதா இல்ல, அதனால வியாபாரம் படு ஜோர்:

தமிழக அரசின் கல்லா புட்டியை அதிக அளவில் நொப்பக்கூடிய துறைகளில் டாஸ்மாக் துறையும் ஒன்று. மாநிலம் முழுவதும் உள்ள 6500 டாஸ்மாக் கடைகளிலிருந்து ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வரை வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 2 முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது போதாது என்று

Saturday, 8 September 2012

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen software

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen software

 நிஜ ஈக்கள் போல் மானிட்டரில் ஈக்களை  உலாவ வைக்கும் மென்பொருள்..ஈடா..ஈடா.. ஈடா!...

ஈக்கள் மொய்க்கும் கம்பியூட்டர் | Download funny flys on your computer screen softwareஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும்.மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும்.

சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது

சேற்றில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இஸ்ரேல் கண்டுபிடித்துள்ளது. இது குறித்து இஸ்ரேலைச் சேர்ந்த மின் உற்பத்தி நிறுவனம் ஜி. ஆர். பி. எல். தரப்பில் கூறப்படுவதாவது.
ஆற்றுப் படுக்கையில் சேரும் சேறு, சகதியில் படிந்திருக்கும் மின்காந்த சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. 

மின் உற்பத்திக்கான இயந்திரங்களை பயன்படுத்த சுற்றுச்சூழலுக்கு ஆதரவான சூரிய மின்சக்தி பயன்படுத்தப்படும். இயற்கை எரிவாயு தயாரிப்பு உலை மூலம் சேறு, சக்தியை வெப்பமூட்டுவதன் மூலம் அது வாயுவாக வெளிப்பட்டு மின் உற்பத்தியாகும். 

சேறு, சகதி மட்டுமின்றி தண்ணீரில் நனைந்த குப்பைகளில் காணப்படும் சக்தியிலும் மின் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

Friday, 7 September 2012

ஆன்லைனில் PDF அல்லது MS-Word பைல்களை தமிழில் மொழி மாற்றம் செய்யலாம்:

ஆன்லைனில் PDF அல்லது MS-Word பைல்களை தமிழில் மொழி மாற்றம் செய்யலாம்:



ஒரு சில நேரங்களில் நமக்கு தேவையான விவரங்களை PDF வடிவில் தரவிறக்க இணையத்தில் தேடுவோம். சில சமயம் அந்த தகவல் நமக்கு வேண்டிய மொழிகளில் இல்லாமல் ஏதேனும் மற்ற மொழிகளில் இருக்கும். அந்த மொழிகளை சுலபமாக ஆன்லைனில் நமக்கு வேண்டிய மொழிகளில் மாற்றி கொள்ளலாம். சுமார் 65 மொழிகளில் இந்த வசதியை பெற்று கொள்ளலாம்.

Wednesday, 5 September 2012

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு இனி தடை இல்லை

சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிக்கு இனி தடை இல்லை...

புகை பிடிக்கும் கட்சியில் "புகை பிடிப்பது உடல் நலதிற்கு கேடு" என்ற வாசகம் இடம் பெறவேண்டுமாம்...

"குழந்தையையும் கிள்ளி உட்டுட்டு.. கிள்ளினா இப்படிதான் வலிக்கும் நீதான்  அழாம தூங்கனும்"ன்னு சொல்றாங்க போல...



Monday, 3 September 2012

குறைந்த விலையில் மருத்துவ மருந்து வாங்குவது இனி வெகு சுலபம்

குறைந்த விலையில் மருந்து வாங்குவது இனி வெகு சுலபம். மருந்தினுடைய பக்க விளைவுகள் என்னென்ன என்று கூட தெரிந்து கொள்ளலாம்..(Now buying medicine is a lot more cheaper )


சில மருத்துவர்கள் மருந்து கம்பனிகள் தரும் கமிஷன் காரணமாக நமக்கு விலை உயர்ந்த மருந்துகளை மருந்து சீட்டில் எழுதி தந்து விடுவார்கள் நாமும் வேறு வழி இன்றி கொடுத்த மருந்து என்ன விலையானாலும் வாங்கி செல்வோம்..

Wednesday, 29 August 2012

ஆப்பிள் நிறுவனதிற்கு செலுத்த வேண்டிய தொகையை சாம்சங் நிறுவனம் 30 ட்ரக்குகளில் 5 சென்ட் காசாக அனுப்பியுள்ளதாம்

"இன்று பகல் வெளியான இந்த செய்தியை போலி தகவல் என்று இன்னொரு வலைத்தளம் கூறிவருகிறது...  செய்தி போலியாக இருந்தாலும் படிக்க சுவாரசியமாக இருக்கிறதல்லவா!... "

ஆப்பிள் நிறுவனத்துக்கு ஒரு பில்லியன் டாலர்களை (ரூ.5500 கோடி) இழப்பீடாக வழங்கவேண்டுமென்று சாம்சங் நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றமொன்று உத்தரவிட்டது.

ஆப்பிள் நிறுவனதிற்கு செலுத்த வேண்டிய தொகையை சாம்சங் நிறுவனம் 30 ட்ரக்குகளில் 5 சென்ட் காசாக அனுப்பி காமெடி செய்துள்ளதாக தகவல்("பழிக்கு பழி"). இது ஆப்பிள் நிறுவனதிற்கு பெரிய தலைவலியாகும்...இப்படி அனுப்பப்பட்ட காசுகளை எண்ணி வங்கியில் செலுத்த ஆப்பிள் நிறுவனம் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்..

Tuesday, 28 August 2012

வாழைப்பழ தோலினால் கரை பிடித்த பற்களை வெண்மையாக்க முடியுமாம்

வாழைப்பழ தோலின் மூலம் கரை பிடித்த பற்களை வெண்மையாக்க முடியுமாம்:

உரித்த வாழைப்பழ தோலின் உள்பகுதியை உங்கள் பற்களில் நன்கு படுமாறு வட்ட வடிவில் 2 நிமிடங்கள் தொடர்ந்து  தேய்க்கவும் பிறகு சிறிது நேரம் கழித்து வழக்கமான முறையில் Brush கொண்டு பல்துலக்கவும் ...இப்படி தொடர்ந்து இரண்டு வாரங்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் செய்துவந்தால் பற்க்கள் வெண்மையாகுமாம்.
                           
பற்களில் கரை இருந்தால் இன்னும் சிறுது நேரம் கூடுதலாக தேய்க்கவேண்டுமாம்..

Monday, 27 August 2012

கிறிஸ்துவர்களுக்கு ஓய்வூதியம் தருவதாக ரூ.500 கோடி மோசடி செய்த நிறுவனம் மீது கிறிஸ்துவ அமைப்புகள் புகார்

சென்னை: நாடு முழுவதும் உள்ள பல கிறிஸ்துவ போதகர்களிடம் பல மடங்கு பணம் திரும்ப தருவதாக கூறி, சுமார் ரூ.500 கோடி அளவிற்கு பணம் வசூலித்து மோசடி செய்த ஜான் பிரபாகரன் என்பவர் நடத்தி வந்த நிறுவனம்(இவர், "ஹெச்.ஐ.எம்' என்ற பெயரில், தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். தமிழக அளவில் சுற்றுப்பயணம் செய்த பிரபாகரன், கிறிஸ்துவ மக்களுக்கு ஓய்வூதியத் திட்டம் தருவதாக, பிரசாரம் செய்தார்.) மீது நடவடிக்கை எடுக்க கோரி கிறிஸ்துவ அமைப்புகள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர் சாம் ஏசுதாஸ் மற்றும் தமிழக போதகர்கள் ஐக்கியம் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது.

மலேசியாவுக்கு நித்தியானந்தா வர மலேசிய இந்து சங்கம் கடும் எதிர்ப்பு

மலேசியாவுக்கு நித்தியானந்தா வர கடும் எதிர்ப்பு- இந்து சங்கமே இருக்காது என நித்தி ஆதரவாளர் மிரட்டல்:

கோலாலம்பூர்: இந்தியாவில் பெரும் சர்ச்சைக்குரியவராக இருக்கும் நித்தியானந்தா மலேசியாவிலும் சர்ச்சைக்குரியவராகிவிட்டார்.


மலேசியாவுக்கு வெளிநாட்டிலிருந்து சமயத் தலைவர்களோ அல்லது கோயில்களில் பணிபுரிவரோ வரவேண்டுமானால் இங்குள்ள மலேசிய இந்து சங்கத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். இந்நிலையில் நித்தியானந்தாவை மலேசியாவுக்கு வரவழைக்க அவரது அடிப்பொடி ஒருவர் மிகவும் பகீரத பிரயத்னப்பட்டிருக்கிறார். ஆனால் சர்ச்சைக்குரிய நபரான நித்தியானந்தா மலேசியா வர இந்து சங்கம் அனுமதி கொடுக்கவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...