A loyal Dog Capitan refuses to leave from his dead master's grave for six years
அர்ஜெண்டினாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விலா கார்லொஸ் பாஸ் என்றநகரில் வசித்து வந்தவர் மிகுவல் கஸ்மென் என்பவர் கெபிடன் என்ற பெயருடைய நாயினை அவருடைய மகனிற்கு பரிசளிப்பதற்காக 2005இலிருந்து செல்லப்பிராணியாக வளர்த்தார்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக கஸ்மன் கடந்த 2006ம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.
அவர் இறந்த பிறகு அவர் வளர்த்த அந்த செல்லபிராணியான கெபிடனை காணவில்லை..அது எங்காவது வண்டியில் மோதி இறந்திருக்கலாம் என்று அவருடைய உறவினர்கள் எண்ணினர். ஆனால், ஒரு வாரம் கழித்து ஒரு ஆச்சர்யம் அவர்களுக்கு காத்திருந்தது, ஈமச்சடங்கிர்காக அவருடைய கல்லறைக்கு சென்ற பொது அங்கே அந்த கெபிடன் இருப்பதை கண்டு உறவினர்கள் ஆச்சர்யமுற்றனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், அவருடைய உறவினர்களை கண்டவுடன் கெபிடன் ஒரு விதமான அழுகுரலுடன் அவர்களிடம் வந்து தனது துக்கத்தை பரிமாரிகொண்டதாம். மேலும், அவர் இறப்பதற்கு முன்
வரை அந்த கெபிடன் இந்த மயானம் இருக்கும் இடத்திற்கு வந்ததில்லையாம். எப்படி அதற்க்கு இந்த இடம் தெரியும் என்ற ஆச்சர்யமும், இந்த வாயில்லா ஜீவனுக்குள்ள அதீத பற்றினை கண்டு ஆனந்த கண்ணீரும் வடிக்கின்றனர் அங்குள்ள மக்கள்.
இதில் என்ன ஒரு விசேடமேன்றால் அந்த வாயில்லா ஜீவன் மறைந்த தனது எஜமானின் கல்லறைக்கு அருகில் கடந்த 6 வருடங்களாக வாழ்ந்து வருகிறது...
இந்த நாய்க்கு உணவளிப்பது அந்த மயானத்தின் பராமரிப்பாளர் ஆவார்.
அறிவியல்பூரவமாக நாய்களுக்கு மனிதர்களை விட நூறு மடங்கு அதிக மோப்ப சக்தியுள்ளது அதன் காரணமாகவே அதனால் தன் முதாலாளி இருக்கும் இடத்தை கண்டுகொள்ள முடிந்தது. 6 வருடங்களாக வாழ்ந்து வருவது அதனுடைய அதீத பாசத்தை காட்டுகிறது..