Saturday, 15 September 2012

பவர் ஸ்டார் சீனிவாசன் கைது: 60 லட்ச ரூபாய் ஏமாற்றிய மற்றும் துப்பாக்கி காட்டி மிரட்டியதாக வழக்கு



தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

திரையுலகில் லத்திகா என்ற படத்தை தயாரித்து நடித்ததன் மூலம் அறிமுகமானவர் டொக்டர் சீனிவாசன்.
இவரை கொலிவுட்டில் பவர் சீனிவாசன் என்றே அடைமொழியோடு அழைத்து வந்தனர்.


தற்போது இயக்குனர் ஷங்கரின் ஐ மற்றும் சந்தானத்துடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்து வருகின்றார்.
இதற்கிடையில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியம் பவர் ஸ்டாரிம் ரூ.10 கோடியை கடனாக கேட்டுள்ளார்.
சொத்துகளின் பத்திரங்களை சரிபார்க்க சீனிவாசன் ரூ.65 லட்சம் வாங்கி உள்ளார். ஆனால் கடன் தாராமல் கடந்த 5 மாதங்களாக சீனிவாசன் ஏமாற்றி வந்தார்.

இதனால் பாலசுப்பிரமணியம் எனக்கு பணம் வேண்டாம். நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுத் தால் போதும் என்றார்.
ஆனால் சீனிவாசன் ரூ.5 லட்சத்தை கொடுத்து விட்டு மீதம் ரூ.60 லட்சத்தை தரமுடியாது என கூறிவிட்டார். மேலும் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இது குறித்து பாலசுப்பிரமணியன், சென்னை பொலிஸ் கொமிஷனர் திரிபாதியிடம் கடந்த மாதம் 24ம் திகதி புகார் கொடுத்தார்.
இதையடுத்து கீழ்ப்பாக்கம் துணை கொமிஷனர் பவானீஸ்வரி மேற்பார்வையில் உதவி கொமிஷனர் ராஜாராமன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் கொண்ட தனிப்படையினர் நேற்று மாலை சீனிவாசனை மடக்கி பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில், நடிகர் சீனிவாசன் ரூ.10 கோடி கடன் தருவதாக கூறி ரூ.60 லட்சம் ஏமாற்றியதை ஒப்புக் கொண்டார்.

இதைதொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட சீனிவாசனை நீதிபதியின் உத்தரவின் படி பொலிஸார் புழல் சிறையில் அடைத்தனர்.


Actor 'Power Star' Srinivasan was arrested on Friday for fraud on Rs 65 lakh of cheating a businessman.  Businessman  G U Balasubramanian, proprietor of RBS International in Chrompet lodged a complaint on  Power Star Srinivasan saying that he has taken a loan of Rs 10 Crore loan from him and has never paid back. Police said that the businessman had approached Srinivasan's finance company, Baba Trading on PH Road to arrange the cash but in return the actor said that he would charge 5 % as service charge for getting the loan.

"Power Star failed to obtain the loan and kept dodging the businessman. He promised to return the sum when the complainant warned him of approaching us," said an investigating officer. It also seems that Bala Surbamanian was threatened at gun point when he approached the actor for his money at his Anna Nagar residence.

Police have registered a case under IPC Section 406 (punishment for criminal breach of trust), 420 (cheating) and 506 (ii) (criminal intimidation) 27 Arms Act. He was remanded in judicial custody and lodged in Puzhal prison. Police said several others had earlier gone to them with complaints against Srinivasan, but they all arrived at a compromise. On May 4, a Saidapet resident called Ganesan lodged a complaint that Srinivasan had taken 10 lakh promising a loan.

Tags: Power Star Arrest | Power Star Arrested | Power Star Srinivasan Arrest | Power Star Srinivasan Arrested | Power Star Srinivasan Fraud | Power Star Srinivasan Reason
Related Posts Plugin for WordPress, Blogger...