Thursday, 30 August 2012

உணவு சாப்பிட்ட பிறகு டீயோ, காபியோ சாப்பிடலாமா?

உணவு சாப்பிட்ட பிறகு டீயோ, காபியோ சாப்பிடலாமா?

இந்தக் கேள்விக்கு டயட்டீசியன் தாரிணி கிருஷ்ணன் சொன்ன பதில் பலரையும் யோசிக்கவைக்கும்.

''பாலைக் காய்ச்சும்போது அதில் உள்ள வைட்டமின்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. பாக்கெட் பாலில் தண்ணீர் கலந்து காய்ச்சும்போது, கொழுப்பின் அளவும் குறையும். பாலுடன் டீத்தூள் சேரும்போது ஆக்ஸலேட் மற்றும் ஃபைடேட் (Oxalate  & Phytate)என்ற ரசாயனங்கள் உருவாகின்றன. உணவுடன் சேர்த்து டீ குடிக்கும்போது உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகித்துக்கொள்ளும் தன்மையை இந்த ரசாயனம் தடுக்கிறது".

எனவேதான், காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றிலோ அல்லது உணவு வேளைகளுக்கு இடையிலோதான் நாம் டீ சாப்பிடுகிறோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...