Monday 27 August 2012

அமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் சுயநலம் கொண்டவர் எனும் உங்களின் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.

இது மிகவும் முக்கியமான செய்தி.  நம்மில் பலரும் அமெரிக்க ஐரோப்பிய பணக்காரர்கள் எல்லாம் மற்ற தேசங்களில் உள்ள மக்களைப் பற்றி கவலை கொள்வதில்லை என்ற பரவலான கருத்து உள்ளது.  அவர்கள் அனைவரையும் “அமெரிக்க முதலாளித்துவம்” எனும் இரு சொல்லில் அடக்கி ஏசுவோரும் உண்டு.
ஆனால் உண்மையில் பிற தேச மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மேலை நாட்டு மக்களும் உண்டு.  இவர்கள் $200 , $500 என மிகச் சிறிய அளவிலான பணத்தை ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்களுக்கு சிறு கடன் தொகையாக வழங்குவர்.  அவர்கள் அந்தப் பணத்தை பயன்படுத்தி தமது சிறு தொழில்களை (புதிய மாடு வாங்குவது, ஆடுகளை வாங்கி வளர்த்து விற்பபது, பெட்டிக் கடை வைப்பது, தையல் எந்திரம் வாங்குவது.. ) ஆரம்பிக்க மற்றும் மேம்படுத்த பெறுவர். பெற்ற பணத்தை சிறிது சிறிதாக திரும்ப கொடுப்பர்.


இவர்களுக்கு கடன் கொடுத்தவருக்கு வட்டி ஏதும் கிடைக்காது. ஆனால் அந்த அந்த நாட்டில் உள்ள கிவா பங்களிப்பு சேவை நிறுவனங்கள் குறைந்த அளவில் வட்டி வசூலிக்கும் 0 , 0.2,  0.5, 1%  எனும் மிக மிக குறைந்த அளவிலேயே அந்த வட்டி இருக்கும். இங்கே உலக அளவில் அவர்கள் வாங்கும் வட்டி விவரம் உள்ளது.

தான் சாம்பாரித்த பணத்தின் சிறு அளவை பிற மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் எனும் நோக்கில் பலரும் கிவா தளத்தில் பலருக்கும் கடன் கொடுத்து வருகின்றனர். வாங்கும் கடனை  திரும்ப செலுத்தும் விகிதம் 98.9% அளவில் உள்ளது.
ஆப்பிரிக்க மக்களுக்கு மிகவும் பயன்பட்ட கிவா இப்போது இந்தியாவில் மூன்று சேவை பங்களிப்பாளர் துணையுடன் செய்யல்பட ஆரம்பித்துள்ளது.
உங்களுக்கு தெரிந்த சிறு தொழில் செய்யும் மகளிர் அல்லது மாணவர்க்கு உதவ நீங்கள் விரும்பினால் கிவா தளத்தை பயன்படுததுங்கள்.


நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே...

Related Posts Plugin for WordPress, Blogger...