Monday, 27 August 2012

கடை இடியாப்பம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல்

கடை இடியாப்பம் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல்:


இடியாப்பம் ஒரு நல்ல உணவு என்பதில் சந்தேகமே இல்லை. அதில் கொழுப்பும் இல்லை, அதிலும் அரிசிமாவு இடியாப்பம் சக்கரை வியாதி உள்ளவர்கள் கூட சாப்பிடலாம் என்று கூறுவார்கள்.

ஆனால் இடியாப்பத்தை விற்பனை செய்யும் . பெரும்பாலான கடைக்காரர்கள் இடியாப்பத்தை எவ்வாறு தயாரிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்டால், இனிமேல் இடியாப்பத்தை சாப்பிடவே மாட்டீர்கள் !



இடியாப்ப மாவை குழைக்கும்போது, பிழிவதற்கு இலகுவாக இருக்கட்டும் என்று அதில் அதிகளவு எண்ணெயை கலக்கிறார்கள். அது சரி நல்ல எண்ணெய்தானே அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா ? அதுதான் இல்லை. சமையல் செய்து, அல்லது பொரித்த பின்னர் மிஞ்சும் எண்ணெயை அல்லவா அந்த இடியாப்ப மாவில் கலக்கிறார்கள். இதில் 2 விஷயங்கள் உள்ளது.

ஒன்று லேசாகப் பிழியலாம் மற்றோன்று இடியாப்பத்துக்கு ஒரு பிரவுன் நிறக் கலர் வருகிறது.

இவ்வாறு நிறைய எண்ணெயைக் கலந்து செய்யும் இடியாப்பம் லேசில் காய்ந்துவிடாது. பாலிஷ் பண்ணியதுபோல காயாமல் கனநேரம் இருக்கும்.

ஆனால் எண்ணெய் ஊற்றிச் செய்வதால், இவ்வகையான இடியாப்பத்தில் அதிக கொழும்பு காணப்படுகிறது.

அதுமட்டுல்லாமல் பொரித்த எண்ணையைப் பயன் படுத்துவதால் அக்கொழுப்பில் கொலஸ்ட்ராலும் அதிகளவு இருக்கும்.

கொலஸ்ட்ரால் உள்ள அந்த எண்ணையை இடியாப்ப மாவில் கலந்து அவிப்பதால் அது மீண்டும் சூடாகி அதிகப்படியான கொழுப்பை உருவாக்கும்.

இதனால் உடம்பிற்கு நல்ல உணவு என்று நாம் நம்பி உண்ணும் உணவு நமக்கே தொந்தரவாகி விடுகிறது.

எல்லாக் கடைகளிலும் இவ்வாறு எண்ணையைக் கலந்து இடியப்பம் தயாரிக்கப்படுவது இல்லை என்கிறார்கள்.

ஆனால் பல கடைகளில் இதுதான் நடக்கிறது. அப்ப்டி ரெடி செய்த கடையில்தான் நீங்கள் இடியாப்பத்தை வாங்கும் நபராகவும் இருக்கலாம் அல்லவா ? அதனால்தான் எச்சரிக்கை!.
Related Posts Plugin for WordPress, Blogger...