Wednesday, 29 August 2012

Dr.Kiran Bedi IPS திருப்பூர் 'town hall' ல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக “ANTI – CORRUPTION “ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.

இன்று திருப்பூர் 'town hall' ல் மேற்கு ரோட்டரி சங்கம் சார்பாக எழுச்சிமிகு இந்தியா என்ற நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்
Dr.Kiran Bedi IPS, “ANTI – CORRUPTION “ என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
அத்தகைய பெருமை வாய்ந்த நபராக இருந்த போதிலும் வரும் போது எந்த அலட்டலும் இல்லாமல் வந்தது ரசிக்க வைத்தது. தன் 63 வயதிலும் துரு துருவென்று ஓடி விளையாடும் சிறு பையனை போல் வந்த விதம், காலதாமதத்தினால் சோர்வாக இருந்தவர்களையும் சுருசுருப்பாக நிமிர்ந்து உட்காரச்செய்தது என்றால் அது மிகையாகாது. பையனை போல் தோற்றம் கொண்டிருந்ததால் அருகில் இருந்த என் தோழி பாவம் அடையாலம் காண சற்றே சிரமப்பட்டால். ஆனால் விழா முடிவில் பெண் என்றால் அவர் போல தான் இருக்க வேண்டும் என்று அங்கிருந்த எல்லார் மனதிலேயும் தோன்றியிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. வரவேற்புரை முடிந்த பின் ஸ்ருதி என்ற பெண் அவரை கௌரவிக்கும் பொருட்டு பொன்னாடை அணிவித்தார் அதை அன்போடு ஏற்று மறுநொடி அதை எடுத்து அந்த பெண்ணுக்கே அணிவித்து, அவரை கௌரவப்படுத்தியது சபாஷ்... ! பேச ஆரம்பிக்கும் முன் அனைவருக்கும் தான் உரையாற்றப் போகும் ஆங்கில மொழி தெரியுமா என்று கேட்டது, அனைவரும் கவனித்து கடைபிடிக்க வேண்டிய ஒன்று.அனைவரும் ஆங்கிலம் தெரியும் என்று பதில் சொல்லியும் நார்த் இந்தியன் ஸ்டைலில் இங்கிலீஷ் பேசும் நான் உங்களுக்காக south Indian style ல் english பேசுகிறேன் என்று சொன்னது அவர் கூற வரும் கருத்து சென்றடைய வேண்டும் என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறார் என்பது புரிந்தது. விழாவில் அவர் பேசியது ஊழல் பற்றிய விழிப்புணர்வே..! 


அவர் உரையின் சுருக்கம்:

1. லஞ்சம்,ஊழல் பற்றிய புகாரை தெரிவிக்கும் வசதி இல்லாதது அந்த தவறு அதிகம் நடைபெற காரணமாக உள்ளது.(போலீஸ் கன்ட்ரோல் ரூம் நம்பர் 100 என்பது தெரிந்தது போல் லஞ்சம், ஊழல் புகார் எங்கு யாரிடம் கொடுப்பது என்பது பலருக்கு தெரிவதில்லை.)


2. அப்படியே புகார் கொடுத்தாலும் அது சம்பந்தப்பட்ட நபர்களிடமே விசாரணைக்கு வருவதால் அவர்கள் செய்த தவறு மறைக்கப்படுகிறது.


3. மத்திய புலனாய்வுத்துறை இயங்கி வந்தாலும் அது பிரதமரின் கீழ் இயங்கும் துறை என்பதால் ஆளும்கட்சிகள் செய்யும் ஊழல்கள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது.


4. சாதாரண மனிதன் செய்த திருட்டுக்கு தண்டனை கொடுக்கும் நாம் நம் தேசத்தில் ஊழல் என்ற பெயரில் நடக்கும் பகல் கொள்ளைக்கு தண்டனை கொடுக்கிறோமா?? (100 ரூபாய் திருடியது குற்றம் என்றால் கோடிக்கணக்கில் நடக்கும் ஊழல் எவ்வளவு பெரிய குற்றம்..?)


5. திருட்டுப்போன நம் நகைகளையும், பைக்கையும் மீட்டு வரத்துடிக்கும் நாம் நமது வரிப்பணத்தில் ஊழல் செய்த கயவர்களிடமிருந்து பணத்தை மீட்க நினைக்கின்றோமா? ஊழலுக்கு எதிராக எழ வேண்டும். 


6. அப்படியே புகார் கொடுத்தாலும் புகாரை எடுக்கும் நபர் தம் பதவி அல்லது பணி போய்விடுமோ என்ற பயத்தில் நாம் கொடுக்கும் புகாரை எடுப்பதில்லை. 


7. அப்படி புகார் எடுக்கப்பட வேண்டும் என்றால் குற்றத்தை விசாரிக்கும் துறை எந்தவித இடர்பாடுகளோ, தலையிடலோ இல்லாமல் சதந்திரமாக செயல்படுவதாக இருக்க வேண்டும். மற்றும் அனைத்து மக்களையும் லோக்பால் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். தவறு செய்வது இந்திய அரசாங்கத்தை ஆளும் பிரதமராகவே இருந்தாலும் அவரை விசாரிக்கவும், தவறு நிரூபிக்கப்பட்டால் தண்டனை அளிக்கவும் சட்டம் உருவாக்கப்பட வேண்டும். 


8. மக்கள் மிக்ஸி கிரைண்டர் போன்ற இலவச பொருட்களுக்காகவும் 1000 ரூபாய் பணத்திற்காகவும் தன் ஓட்டுரிமையை விற்கிறார்கள் என்பது கொடுமை,. அது மக்கள் செய்யும் மன்னிக்க முடியாத தவறு. 1000 ரூபாய் பணத்தை கொடுப்பவன் பதவிக்கு வந்ததும் கோடி கோடியாய் கொள்ளை அடிப்பான். 


9. அவன் கொடுக்கும் 1000 ரூபாய் பணமும் ஊழல் செய்து சேர்த்த பணமே...! எனவே ஓட்டுரிமையை விற்கும் மக்கள் திருந்த வேண்டும்.


10. ஒரு குடிமகனுக்கு எப்படி தன்னை ஆளும் அரசை தேர்ந்தெடுக்க ஓட்டுரிமை இருக்கிறதோ அதே போல் தேர்ந்தெடுத்த உறுப்பினரை அவரின் நடவடிக்கை சரி இல்லாத பட்சத்தில் அல்லது அவர் குற்றம் செய்யும் பட்சத்தில் அவரை நீக்கவும் மக்களுக்கு உரிமை கொடுக்கப்பட வேண்டும்.
இன்னும் நிறைய பேசினார். பின் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அப்போது பல நகைச்சுவைகளும் நடந்தது. கடினமான, இக்கட்டான சூழ்னிலையைக் கூட நகைச்சுவையான தருணமாக ஆக்கிவிடுவது IAS, IPS,IFS அதிகாரிகளுக்கே உரிய சிறப்பு. ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால் நாங்கள் கேள்வி கேட்க போய் நின்றும் அவருக்கு நேரமின்மை காரணமாக எங்களால் ஒரு கேள்வி கூட கேட்க முடியவில்லை.இருந்தபோதிலும் பல பதில்களோடு வீடு திரும்பினோம்.
பாரத் மாதா கி ஜே..... என்று சொல்லி நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

— 
- Fathima Reshu
Related Posts Plugin for WordPress, Blogger...