அரசியல் தலைவர்களும் தலைவிகளும் சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறார்களாம் ..
உங்களுடைய ஆழ்ந்த இரங்கல் அவகளது வாழ்வில் ஒளி வீச போகிறதா?...
மரியாதையா அவங்களுக்கு வேற நிம்மதியான தொழில் செய்றமாதிரி வழி பண்ணி குடுங்க, நிறைய தொழிலாளிகள் இந்த வெடி தயாரிப்பு தொழில் செய்யும் முதலாளிகளுக்கு கொத்தடிமைகளா வேலை செய்யறாங்களாம்... அத மொதல்ல மாத்த முயற்சி பண்ணுங்க...
இன்னும் நாலு நாளைக்கு இரங்கல், அனுதாபம், சென்று பார்த்தேன், விவாதிதோம்ன்னு சொல்லிப்புட்டு அப்புறம் வேற எதாவது அடுத்த நிகழ்ச்சி நடந்தா அதுக்கு உங்க ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்க போய்டுவீங்க... இப்படியே உங்க பொழப்பு ஓடுது... மக்களை பத்தியும் கொஞ்சம் சிந்திங்க தலைவர்களே, தலைவிகளே!...
இறந்த மற்றும் படுகாயம் அடைஞ்சவங்களுக்கு உதவி பணம் மட்டும் குடுத்துட்டா இந்த மாதிரி இன்னுமோர் நிகழ்ச்சி நடக்காம போய்டுமா...இன்னும் தீபாவளிக்குள்ள இது மாதிரி எத்தன பரிதாப நிகழ்ச்சி நடக்க போகுதோ... அப்புறம் அடுத்த அடுத்த தீபாவளிக்கு இது மாதிரி அம்பது நூறு பேர்ன்னு சாவாங்க நீங்க வெறும் அனுதாபம் மட்டும் தெரிவிப்பிங்க, உதவி பணம் தருவீங்க... அவ்வளவுதானா உங்களோட வேலை?....