Wednesday 5 September 2012

நீங்க தீபாவளிக்கு பட்டாசு வெடிச்சே ஆகணுமா? : சிவகாசியில் வருடா வருடம் பட்டாசு பாக்டரியில் பட்டாசுகள் வெடித்து பல ஏழை தொழிலாளிகள் பலியாகின்றனர்

5 செப் 2012: சிவகாசியில் பட்டாசு பாக்டரியில் பட்டாசுகள் வெடித்து 40 பேருக்கு மேல் பலி, வேடிக்கை பார்க்க சென்ற 50க்கு மேற்பட்டோர் படுகாயம் :
சங்கி: பலபேர் உயிரை குடித்து தயாரிச்ச பட்டாசை வாங்கி வெடிக்கணுமா?.. 

மங்கி: இந்த பட்டாசு தொழில் எவ்வளவு பேருக்கு சோறு போடுதுன்னு உனக்கு தெரியாதாடா...?

சங்கி: அது சரி.. அவங்க சோறு சாப்பிட்றத பத்தி உனக்கு ரொம்பதான்டா அக்கறை...

நான் அடிச்சி ஆணித்தரமா சொல்வேன் இப்படி சொல்றவங்க எல்லாம் ஒரு சுயநலவாதின்னு, தன் சுயநலத்திற்கு பட்டாசு தொழிலாளிகளை பலிகடா ஆக்றாங்க.

பட்டாசு தொழிலாளிக்கு சோறு சாப்பிட இந்த ஒரே ஒரு தொழில் தான் இருக்குதா, வேற நல்ல நிம்மதியான தொழிலே இல்லையா?..

என்னடா மங்கி, சொல்லுடா...?

மங்கி: பட்டாசு விலைங்கல்லாம் அதிகமா வேற விக்குது,  அதனால இந்த தொழில் செய்யற தொழிலாளிக்கு நிறைய வருமானம் கெடைக்கிற தொழிலா இருக்கும் அதனாலதான் அவங்க உயிரையும் பாக்காம வேல செய்றாங்க...

சங்கி: அட போடா, வெளக்கென்ன... நீ வாங்குற பட்டாசு விலை அப்படியே தொழிலாளி கைக்கு பொய் சேருதுன்னு நெனைச்சியோ?...

பட்டாசு தயாரிக்கும் பாக்டரி முதலாளி அவனோட லாபத்துக்கு ஒரு விலை வச்சி விக்கிறான் அப்புறம் அத வாங்கி ஹோல் சேல்காரன் ஒரு விலைக்கு விக்கிறான் அப்புறம் சின்ன சின்ன கடைக்காரனுங்க போதுமான அளவு வாங்கி நம்மகிட்ட விலை கூடுதலா வச்சி விக்கிறாங்க. அதான் பட்டாசு விலை அதிகமா இருக்குது.. நீ வேணும்னா நேரடிய பாக்டரில இருந்து பட்டாசு வாங்கி பாரு விலை கொறச்சி  இருக்கும்...

மொத்ததுல "பாயசம் சாப்டறது ஒருத்தன், வெரல் சூப்றது இன்னொருத்தன்"...

மங்கி: எனெக்கென்னமோ நீ சொல்றது நியாயமாத்தான் தெரியுதுடா சங்கி...நான் இனிமே எந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்கி வெடிக்க மாட்டேன்டா, அதுக்கு பதிலா ஆதரவு இல்லாதவங்களுக்கு எதாவது என்னால முடிஞ்ச உதவி செய்ய போறேண்டா.. காசும் அதிக செலவு இல்ல, மனசுக்கும் நிம்மதி, சுத்துபுரமும் தூய்மையா இருக்கும்...

சங்கி: அட, எனக்கு கூட இந்த யோசனை தோனலடா மங்கி...  சூப்பர் டா!..


"தயவு செய்ஞ்சி திருந்துங்க மக்களே...."

Government should "Ban Firing Crackers". It is waste of money, energy and even causes serious injuries, accidents.etc..To the best of my knowledge I avoid firing crackers. Why? What is the need? To this amount we can do help to the poor peoples.

We can celebrate by lighting "deepam" (vilakku) and sharing with sweets. Also it pollutes the environment (Starting from air, noise, solid waste, hazardous waste and ultimately water pollution, as it occurs during rainy days).

More over every year Sivakasi incidents takes place. Whenever accidents take place Government condoles and distributes relief funds and forgets. Is this a permanent solution? People should realize and please avoid firing crackers and inculcate their child to do so. (Why we are wasting our money? avan avan "kari"a kasaakuran, namma yen kasi- "Kari” aakanum).


"தயவு செய்ஞ்சி திருந்துங்க மக்களே!...."

Related Posts Plugin for WordPress, Blogger...