Monday, 10 September 2012

டாஸ்மாக்: ஒரு ஃபுல் பாட்ல ராவா அடிச்ச மாதிரி சரக்கு விலை கிர்ர் சர்ர்ன்னு ஏறிபோச்சி

டாஸ்மாக்(TASMAC): ஒரு ஃபுல் பாட்ல ராவா அடிச்ச மாதிரி சரக்கு விலை கிர்ர்.. சர்ர்ன்னு ஏறிபோச்சி: ஆனாலும் நம்ம குடிமக்கள் விட்றதா இல்ல, அதனால வியாபாரம் படு ஜோர்:

தமிழக அரசின் கல்லா புட்டியை அதிக அளவில் நொப்பக்கூடிய துறைகளில் டாஸ்மாக் துறையும் ஒன்று. மாநிலம் முழுவதும் உள்ள 6500 டாஸ்மாக் கடைகளிலிருந்து ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வரை வருமானம் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு 2 முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது போதாது என்று
மீண்டும் 3வது முறையாக விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஓட்கா ஆகிய பிராண்ட்களின் விலை அதிரடியாக 5ரூபாய்லிருந்து 45ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. குவார்ட்டர் பாட்டில் ரூ.5 முதல் ரூ.10 வரையிலும், ஆஃப் பாட்டிலுக்கு ரூ.5 முதல் ரூ.15 வரையிலும், ஃபுல் பாட்டில் ரூ.40 முதல் ரூ.45 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இன்று காலை 10.30 மணிக்கு இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இந்த புதிய விலை விவரம் குறித்த பட்டியல் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. விலை உயர்வு உடனடியாக அமலுக்கு வந்தாலும் விற்பனையில் எந்தவிதமான மந்த நிலையும் இல்லை என்றனர் டாஸ்மாக் ஊழியர்கள்.

சில முக்கிய சரக்குகளின் விலைபட்டியல் விபரம்.

மதுபானம்         பழையவிலை  புதியவிலை

ஹனிபி குவார்ட்டர்    75   80                   
எம்சி ஆஃப்    145    160
ஹனிபி ஃபுல்    285    320
சீசர் குவார்ட்டர்    105    110
ஓல்டு கிங் ரம் குவார்ட்டர்    65    70
ஓல்டு கிங் ரம் ஆஃப்    130    140
எம்சி செலிப்ரேஷன் குவார்ட்டர்    85    90
எம்சி செலிப்ரேஷன் ஆஃப்    155    180
எம்சி வி.எஸ்.ஓ.பி குவார்ட்டர்    85    90
எம்சி வி.எஸ்.ஓ.பி ஆஃப்    170    180
ஆர்சி விஸ்கி குவார்ட்டர்     135    140
விஎஸ்ஓபி எக்ஷா கோல்டு
பிராந்தி    105    110
நெப்போலியன் குவார்ட்டர்    85    90
ஓல்டு சீக்ரெட் ரம் குவார்ட்டர்    65    70
ஓல்டு சீக்ரெட் ரம் ஆஃப்    130    140
ஓல்டு சீக்ரெட் ரம் ஃபுல்    260    280
ஓல்டு மங்க் கோல்டு குவார்ட்டர்    90    100
ஓல்டு மங்க் கோல்டு ஆஃப்    180    200
மானிட்டர் பிராந்தி குவார்ட்டர்    65    70
மானிட்டர் பிராந்தி ஆஃப்    130    140
பக்காடி கிளாஸ்டிக் ரம் குவார்ட்டர்    155    160
பக்காடி கிளாஸ்டிக் ரம் ஆஃப்    310    320
மார்ப்பியஸ் பிரீமியம் குவார்ட்டர்    135    140
பக்காடி லெமன் குவார்ட்டர்    155    160
பக்காடி லெமன் ஆஃப்    310    320
பக்காடி பிளாக் ரம் குவார்ட்டர்    155    160
Related Posts Plugin for WordPress, Blogger...