Wednesday, 3 October 2012

எக்ஸ்ரே எடுக்க ரூ.150 லஞ்சம்: அரசு மருத்துவமனை ஊழியர் 'டிஸ்மிஸ்'

வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க ரூ.150 லஞ்சம் கேட்ட ஒப்பந்த பணியாளரை, பணி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

Govt Hospital x-ray Rs.150 bribe
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கலெக்டர் சங்கர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது மருத்துவமனையின் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று டாக்டர்கள், நர்சுகள் வருகை பதிவேடுகளை பரிசோதித்தார்.


அப்போது மருத்துவமனையில் உள்நோயாளியாக இருக்கும் பொன்னம்மா என்பவரது உறவினர், மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுக்க ஊழியர்கள் ரூ.150 பணம் கேட்பதாக தெரிவித்தார். மேலும் பணத்தை தந்தால் மட்டுமே எக்ஸ்ரே எடுக்க முடியும் என்று கூறுவதாக, கலெக்டரிடம் தெரிவித்தார்.
இது குறித்து உடனடியாக விசாரிக்குமாறு மருத்துவமனை முதல்வருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார். அவர் நடத்திய விசாரணையில், ஜனார்த்தனன் என்பவர் எக்ஸ்ரே எடுக்க ரூ.150 லஞ்சம் கேட்டது தெரியவந்தது.

கலெக்டரின் உத்தரவை ஏற்று ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வந்த ஜனார்த்தனனை உடனடியாக பணி நீக்கம் செய்து, மருத்துவக்கல்லூரி முதல்வர் ரவிசங்கர் உத்தரவிட்டார்.

மேலும் மருத்துவமனையை தூய்மையாகவும், சுகாதாரமான முறையில் பராமரிக்குமாறு மருத்துவமனை அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

  மக்கள் கருத்து : அட பாவி  பயலுங்களே தனியார் மருத்துவமனையிலேயே   X-ray எடுக்க 100 - 150ரூபாதான் பீஸ் வாங்குறாங்க...அப்புறம் எதுக்காகடா  அரசு மருத்துவமனை..  போங்கடா கட்டைல  போரவனுன்களே... உங்களுக்கு நல்ல சாவே வராதுடா...
News summary in English: Vellore government hospital X-ray staff Janarthanan was dismissed for getting Rs.150 bribe. Vellore district collector Shankar made a sudden visit to the hospital and ordered to take action against the staff
Related Posts Plugin for WordPress, Blogger...