Wednesday, 3 October 2012

சென்னை திருவல்லிக்கேணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 மாடி வீடு இடிந்து விழுந்து 2 பேர் பலி: பலர் சிக்கித் தவிப்பு

THIRUVALLICANI_100_year_old_building collaps_tamilnadu


THIRUVALLICANI_100_year_old_building collaps_chennai














A residential building suspected to be over 80-years-old collapsed in Chennai. on Wednesday morning:
சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த  2 மாடி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பெண் உள்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.


சென்னை திருவல்லிக்கேணி சுங்குவார் தெருவையொட்டி சுங்குவார் லேன் எனப்படும் சந்து உள்ளது. இங்கு தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான 2 மாடி கட்டிடம் உள்ளது. இது 100 ஆண்டு பழமையான கட்டிடம் ஆகும்.

இதன் 2-வது மாடியில் தியாகராஜனும், அவரது மனைவி மஞ்சுவும் வசித்து வந்தனர். கீழ் தளத்தில் அச்சகத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும் அதே கட்டிடத்தில் 7 வீடுகளையும் வாடகைக்கு விட்டுள்ளார்.

THIRUVALLICANI_100_year_old_building collaps_tamilnaduஇந்த நிலையில் இன்று காலை 7.50 மணிக்கு 2 மாடி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. இதனால் அங்கு குடியிருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். குறுகிய சந்து என்பதால் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை அவர்களால் மீட்க முடியவில்லை.

THIRUVALLICANI_100_year_old_building collaps_tamilnadu
இதன் அருகில் இருந்த பழைய கட்டிடம் ஒன்று சிறிது நாட்களுக்கு முன் புதிதுபடுத்துவதற்காக இடிக்கபட்டதாம். தற்போது இடிந்து விழுந்த இந்த பழைய கட்டிடம் இடிக்கப்பட்ட அந்த கட்டிடத்தின் உதவியால் இவ்வவளவு நாட்கள் இடியாமல் இருந்தாதக அருகில் வசிப்பவர்கள் சொல்கின்றனர்.

வாசகர்களே பழைய கட்டத்தில் வசிப்பவர்கள் எதிர்வரப்போகும்  ஆபத்தை உணர்ந்து கட்டிடம் இடிவதர்க்குள் உங்களையும் உங்கள் கட்டிடங்களையும் பாதுகாத்துகொள்ளுங்கள்..


தொடர்பான கட்டுரைகள்:
Related Posts Plugin for WordPress, Blogger...