Friday 28 March 2014

ரெயில் நிலையத்தில் வங்கி ஊழியர் திருநங்கைகளால் கொலை

பொன்னேரி ஆலாடு சாலையில் வசித்தவர் சீனிவாசன் என்கிற லிங்கம் (வயது 52).  இவர் பழவேற்காடு இந்தியன் வங்கியில் குமாஸ்தாவாக வேலை செய்து வந்தார். சென்னை செல்லும் மின்சார ரெயிலில் 6.40 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லிங்கத்தை சுற்றி 5 திருநங்கைகள் சூழ்ந்து கொண்டு தகாத வார்த்தைகள் கூறி வெறிச்செயலில் ஈடுபட்டனர்.

பின்னர் மீஞ்சூர் ரெயில் நிலையத்தில் இறங்கிய போது அவரை கீழே தள்ளிய நிலையில் லிங்கத்தின் ஆடையை களைந்து அவரது அடிவயிற்றில் தாக்கினார்கள். இதில் வேதனை தாங்கமுடியாமல் லிங்கம் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்றனர். அங்கு உயிருக்கு போராடிய நிலையில் இருந்த லிங்கம் தண்ணீர் கேட்டார். உடனே ரெயில்வே போலீசார் தண்ணீர் கொடுத்த போது திருநங்கைகள் தகாத செயலால் இப்படி நடந்ததாக அவர் போலீசாரிடம் கூறினார். சற்று நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த ஒரு திருநங்கையை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் வங்கி ஊழியர் லிங்கத்தை மீஞ்சூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

http://www.maalaimalar.com/2014/03/29093855/minjur-railway-station-bank-wo.html
Related Posts Plugin for WordPress, Blogger...