
முதலாவது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் மின்சாரவாரியம் கட்டணங்களை அளவிடும் முறை. மின்சாரம் அறவே உபயோகிக்காவிட்டாலும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியாக வேண்டும். பயனீட்டு அளவு அதிகரிக்கும் தோறும் ஒரு யூனிட்டுக்கான கட்டணம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே போகும். எவ்வளவு குறைவாக மின்சாரம் செலவளிக்கிறோமோ அதற்கேற்றபடி ஒரு யூனிட்டுக்கான கட்டணம் குறைவாக இருக்கும். அதற்காக வீட்டில் எல்லா விளக்குகளையும் அணைத்து போட்டுவிட்டு இருளில் இருப்பதால் எங்கேயாவது போய் முட்டிக்கொண்டு ஆஸ்பத்திரி பில் கட்ட வேண்டி வரும். பின் எப்படித்தான் மின்சாரத்தை எப்படி சிக்கனப்படுத்துவது?
மேலும் படிக்க »